/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் கழிப்பறை கட்டட பணி 'குடி' மையமாக மாறிய அவலம்
/
கிடப்பில் கழிப்பறை கட்டட பணி 'குடி' மையமாக மாறிய அவலம்
கிடப்பில் கழிப்பறை கட்டட பணி 'குடி' மையமாக மாறிய அவலம்
கிடப்பில் கழிப்பறை கட்டட பணி 'குடி' மையமாக மாறிய அவலம்
ADDED : ஆக 10, 2024 11:05 PM

ஊத்துக்கோட்டை,: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
தமிழக -- ஆந்திர எல்லையில் இவ்வூர் உள்ளதால், ஆந்திராவில் உள்ள பகுதிகளில் இருந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு செல்பவர்கள் ஊத்துக்கோட்டை சென்று அங்கிருந்து பேருந்து நிலையம் சென்று, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர்.
பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிக்க பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் கழிப்பறை உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாதது மற்றும் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு வாயிலாக 20 லட்சம் ஒதுக்கீடு செய்து, 10 கழிப்பறை கட்ட பணி துவங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்டடம் கட்டும் பணி துவங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் மற்றும் குடி மையமாக செயல்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட கழிப்பறை கட்டடப் பணியை விரைவு படுத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

