/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகம் 9 ஆண்டுகளாகியும் சீரமைக்காத அவலம்
/
சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகம் 9 ஆண்டுகளாகியும் சீரமைக்காத அவலம்
சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகம் 9 ஆண்டுகளாகியும் சீரமைக்காத அவலம்
சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகம் 9 ஆண்டுகளாகியும் சீரமைக்காத அவலம்
ADDED : ஆக 07, 2024 02:34 AM

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள சுடுகாடு அருகே, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டடம், 2011- - -12ம் ஆண்டு, 1.75 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால் மகளிர் சுகாதார வளாகத்தை கடந்த 2015ம் ஆண்டு முதல் இப்பகுதி பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மகளிர் சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது மகளிர் சுகாதார வளாகம் முழுதும் சேதமடைந்து புதர் மண்டி கிடக்கிறது.சேதமடைந்து ஒன்பது ஆண்டுகளாகியும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தைசீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.