/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரிட்டிவாக்கத்தில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு
/
பேரிட்டிவாக்கத்தில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு
பேரிட்டிவாக்கத்தில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு
பேரிட்டிவாக்கத்தில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு
ADDED : ஆக 14, 2024 08:32 PM
ஊத்துக்கோட்டை:பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் பேரிட்டிவாக்கம் கிராமம், காலனி, வடதில்லை, உப்பரபாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆறு வார்டுகளில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு வாயிலாக, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால், குடிக்கப்பதற்கு பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. இதன் காரணமாக, கேன் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றனர்.
அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கரிடம் மக்கள் முறையிட்டு தீர்வு காண உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் தில்லைகுமார் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் உள்ளது. ஊராட்சியில் நடந்த 10 கிராம சபை கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்தில் மாமண்டூர், வேளகாபுரம் ஊராட்சிக்கு, 2.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது.
இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும் கலெக்டர் பிரபுசங்கர், எங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.