/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் ஜாத்திரை உற்சவம் கோலாகலம்
/
பொதட்டூரில் ஜாத்திரை உற்சவம் கோலாகலம்
ADDED : செப் 11, 2024 01:19 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில் ஜாத்திரை உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரட்டம்மன் உற்சவத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
கிராம தேவதை பொன்னியம்மன் தினசரி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வருகிறார். செவ்வாய் கிழமையான நேற்று மூலவர் பொன்னியம்மன், ரூபாய்நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, தனலட்சுமியாக அருள்பாலித்தார்.
இன்று காலை பொதட்டூர்பேட்டை நடுதெருவில் எழுந்தருளும் கங்கையம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டுகிறது. நாளை மறுதினம் 13ம் தேதி மாலை ரத உற்சவம் நடைபெறும். ஆர்.கே.பேட்டை, வங்கனுார், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் ஜாத்திரை திருவிழா நடந்து வருகிறது.
திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி, மத்துார் மற்றும் முருகூர் ஆகிய கிராமங்களில் நேற்று கங்கையம்மன் ஜாத்திரை விழா நடந்தது. விழா முன்னிட்டு, அம்மன் கோவில்களில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது.
தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகங்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இரவு, 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. அப்போது பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.