/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு ஜே.சி.பி., சிறைபிடிப்பு
/
குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு ஜே.சி.பி., சிறைபிடிப்பு
குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு ஜே.சி.பி., சிறைபிடிப்பு
குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு ஜே.சி.பி., சிறைபிடிப்பு
ADDED : ஜூன் 30, 2024 12:39 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் செருக்கனுார், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் உட்பட, 6 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கும் வகையில், 48 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
இதற்காக பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், ஆறு உறிஞ்சு கிணறுகள் அமைத்து அதன் மூலம், தினமும் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மேற்கண்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவுள்ளது. இதற்காக மேற்கண்ட ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணிகள் முடிந்துள்ளன. தற்போது பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து கே.ஜி.கண்டிகை வழியாக மேற்கண்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் குழாய் புதைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் திருத்தணி ஒன்றியம் கே.ஜி. கண்டிகை பகுதியில், குழாய் புதைப்பதற்கு, பள்ளம் தோண்டிய போது, 730 மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் சாலைகளை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா ராஜசேகர், சிமென்ட் சாலைகளை சேதப்படுத்திய, குடிநீர் வடிகால் ஊழியர்கள் மீது திருத்தணி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குழாய்கள் புதைக்கும் பணியை, நேற்று மீண்டும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரத்துடன் பள்ளம் தோண்டும் பணி துவக்கினர்.
தகவல் அறிந்ததும் கே.ஜி.கண்டிகை பகுதி மக்கள் ஜே.சி.பி., வாகனத்தை முற்றுகையிட்டு சிறை பிடித்தனர். பின் குடிநீர் வடிகால் ஊழியர்கள் மீண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி மக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.