/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்ணதாசன் நகர் சாலை படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
கண்ணதாசன் நகர் சாலை படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
கண்ணதாசன் நகர் சாலை படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
கண்ணதாசன் நகர் சாலை படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 09, 2024 01:15 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதி அருகே கண்ணதாசன் நகர் உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு சாலை, கழிவுநீர் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி நிர்வாகம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் பணிக்காக பணிகள் நடந்த நிலையில், சாலை பெருமளவு சேதமடைந்தது.
இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி பஜார் பகுதியில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதிக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.