/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இடிந்தும் அகற்றப்படாத கீச்சலம் அரசு தொடக்கப் பள்ளி
/
சுற்றுச்சுவர் இடிந்தும் அகற்றப்படாத கீச்சலம் அரசு தொடக்கப் பள்ளி
சுற்றுச்சுவர் இடிந்தும் அகற்றப்படாத கீச்சலம் அரசு தொடக்கப் பள்ளி
சுற்றுச்சுவர் இடிந்தும் அகற்றப்படாத கீச்சலம் அரசு தொடக்கப் பள்ளி
ADDED : பிப் 27, 2025 12:58 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டை சாலையில் அரசு உயர்நிலை பள்ளியும், கிராமத்தின் தென்மேற்கில் வயல்வெளியையொட்டி அரசு தொடக்க பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
அரசு தொடக்க பள்ளி வளாகம், மரங்கள் அடர்ந்து இயற்கையான சூழலில் அமைந்துள்ளன. இந்த பள்ளி வளாகத்தின் நுழைவாயிலையொட்டி, சுற்றுச்சுவர் இடிந்து கிடக்கிறது. இதனால், வாயிற்கதவை பூட்டியும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தின் உள்ளே வடமேற்கு திசையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளும் அகற்றப்படாமல் அங்கேயே கிடக்கிறது.
சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து குட்டிச்சுவராக நிற்கிறது. இதனால், வெளியில் இருந்து விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்லும் நிலை உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காட்டுப்பன்றிகளும் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.