/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகில இந்திய கயிறு இழுத்தல் கோழிக்கோடு பல்கலை சாம்பியன்
/
அகில இந்திய கயிறு இழுத்தல் கோழிக்கோடு பல்கலை சாம்பியன்
அகில இந்திய கயிறு இழுத்தல் கோழிக்கோடு பல்கலை சாம்பியன்
அகில இந்திய கயிறு இழுத்தல் கோழிக்கோடு பல்கலை சாம்பியன்
ADDED : மே 05, 2024 11:05 PM

சென்னை: சென்னையில் நடந்த அகில இந்திய கயிறு இழுத்தல் போட்டியில், இருபாலரிலும் கோழிக்கோடு பல்கலை அணிகள் முதலிடங்களை பிடித்து அசத்தின.
ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான கயிறு இழுக்கும் போட்டி, ஓ.எம்.ஆரில் உள்ள ஜேப்பியார் பல்கலை வளாகத்தில், கடந்த 3ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது. ஆண்களில், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலை, கேரளா பல்கலை, ராஜஸ்தான் மாதேவ் பல்கலை, ஜேப்பியார் பல்கலை, அமிட் பல்கலை, கோழிக்கோடு பல்கலை உள்ளிட்ட 39 அணிகளும், பெண்களில் எஸ்.ஆர்.எம்., - வேல்ஸ் உட்பட 36 அணிகளும் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், இருபாலரிலும் கோழிக்கோடு பல்கலை முதலிடத்தையும், கண்ணுார் பல்கலை இரண்டாம் இடத்தையும் வென்றன.
கோட்டயம் எம்.ஜி., பல்கலை மூன்றாம் இடத்தையும், புதுடில்லி ஜி.ஜி.எஸ்.ஐ.பி., அணி நான்காம் இடத்தையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஜீசஸ் ராஜ்குமார்,ஜேப்பியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் ஓம் பிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.