/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
/
திருத்தணியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
ADDED : ஆக 26, 2024 11:11 PM

திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் சாலை சுப்பிரமணியபுரம் பகுதியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா ஒட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
காலையில், உற்சவர்கள் ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.
திருத்தணி பெரிய தெருவில் உள்ள ராமர் கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தி ஒட்டி கிருஷ்ணர், பாமா, ருக்குமணி ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் நகர்மன்ற கவுன்சிலர் தீபாரஞ்சனி வினோத்குமார் உள்ள திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.
திருத்தணி பை-பாஸ் சாலையில், திருத்தணி யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ணன் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு கிருஷ்ணனர் திருவீதியுலா நடந்தது.
திருத்தணி அடுத்த மேல் கசவராஜபேட்டையில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத சந்தான கோபால சுவாமி கோவில் சின்னகடம்பூர் மோட்டூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் ராதாருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. காலை, கிருஷ்ண ஜெயந்தி அபிேஷகம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் இரவு உற்சவர் திருவீதியுலா நடந்தது.
நேற்று, மதியம் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
இன்று, காலை, மூலவருக்கு அபிேஷகம் மற்றும் மாலை, 6:30 மணிக்கு கிருஷ்ணர் ராதாருக்மணி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.