/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருத்திகை உற்சவம் கஜகிரியில் விமரிசை
/
கிருத்திகை உற்சவம் கஜகிரியில் விமரிசை
ADDED : மார் 05, 2025 08:01 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், நேற்று மாசி கிருத்திகை உற்சவம் விமரிசையாக நடந்தது. காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து மஹா தீபாராதனை நடந்தது.
பள்ளிப்பட்டு, நெடியம், சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் சத்திரவாடா, நகரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலைக்கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், கரிக்கல் குமரேசகிரி மலைக்கோவில்களிலும் நேற்று கிருத்திகை உற்சவம் நடைபெற்றது.