/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி, நகரி கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
திருத்தணி, நகரி கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருத்தணி, நகரி கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருத்தணி, நகரி கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மார் 15, 2025 02:12 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் உள்ள பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம், கடந்த 12ம் தேதி கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவக்கிரகம் மற்றும் விக்னேஷ்வர பூஜைகள், மதியம் 12:00 மணிக்கு துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக சென்று, கோவில் கோபுர விமானத்தின் மீதும், மூலவர் மீதும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நண்பகல் 11:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு உற்சவர் திருவீதியுலாவும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் காலனியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவிலிலும், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
நகரி
சித்துார் மாவட்டம், நகரி புதுப்பேட்டையில் உள்ள அகரவிநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 365 கலசங்கள் வைத்து, கடந்த 12ம் தேதி முதல் நேற்று காலை 8:00 மணி வரை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நான்கு கால யாகசாலை நடந்தது.
தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்த பின், கோவில் கோபுரம் மற்றும் அகரவிநாயகர், வள்ளி, தேவசேனா மற்றும் சுப்பிரமணியர் ஆகிய சன்னிதிகளில் உள்ள மூலவர்களுக்கு, கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.