/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஆக 28, 2024 07:05 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இந்த கோவில், சாலை மட்டத்தைவிட தாழ்வாக அமைந்த நிலையில், அதை, 6 அடிக்கு உயர்த்தி, புனரமைக்கும் பணி கடந்தாண்டு ஜனவரி மாதம் துவங்கியது.
தற்போது புனரமைப்பு பணிகள் முற்றிலும் முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக துவக்க நாளான நேற்று காலை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை ஆகியவை நடந்தன.
மாலை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபராதனை நடைபெற்றன.
இன்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், புதிய பிம்பம் கண்திறத்தல், மாலை 5:00 மணிக்கு புதியபிம்பம் பிரதிஷ்டை அஷ்டபந்தம் சாற்றுதல், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தீபாரதனை ஆகியவை நடைபெற உள்ளன.
நாளை காலை 8:00 மணிக்கு வரசித்தி விநாயக பெருமான் மற்றும் பரிவார மூரத்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளன.

