/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி முருகன் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
/
கும்மிடி முருகன் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
கும்மிடி முருகன் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
கும்மிடி முருகன் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்
ADDED : செப் 01, 2024 11:17 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் அழகிய குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தின் உட்புறத்தை சுற்றி புதர்கள் மண்டியுள்ளன.
படிகற்கள் தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் படர்ந்துள்ளன. குளம் துார்ந்துள்ளதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் வெளிப்புறத்தில் குப்பை குவிக்கப்படுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
குளத்தின் தெற்கு திசையில் இருந்த சுற்றுச்சுவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மற்ற திசைகளில் உள்ள சுற்றுச்சுவரும் விரிசல் கண்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
கும்மிடிப்பூண்டி பகுதியின் முக்கிய நீராதாரம் மட்டுமின்றி, பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் இக்குளம், தற்போது சீரழியும் நிலையில் உள்ளது.
எனவே, குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.