ADDED : செப் 07, 2024 07:33 PM
திருவள்ளூர்:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சட்டாராம், 35 என்பவர் திருவள்ளூர் விக்னேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகளை கடத்தி வந்து திருவள்ளூர், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவர் மீது திருவள்ளூர் தாலுகா, நகர காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி சட்டாரமை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சட்டாராம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப் பெருமாள்பரிந்துரைபடி, கலெக்டர் த.பிரபு சங்கர், சட்டாராமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை திருவள்ளூர் தாலுகா போலீசார் சென்னை புழல் சிறையில் ஒப்படைத்தையடுத்து சட்டாராம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.