/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் வாலிபர் இருவருக்கு 'குண்டாஸ்'
/
கடம்பத்துார் வாலிபர் இருவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 05, 2024 02:16 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கமலேஷ், 21, பாலா மகன் கனிஷ்கர், 22 ஆகியோர் மீது மணல் திருட்டு, கஞ்சா, வழிப்பறி, அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளன.
இவர்கள் ஜூன் 13ம் தேதி வெண்மனம்புதுார் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் தினேஷ், 28 என்பவரை தாக்கிய வழக்கில் கடம்பத்துார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்.பி சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில், கலெக்டர்பிரபுசங்கர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை கடம்பத்துார் போலீசார், சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.