/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈசா ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களை அகற்ற கெடு
/
ஈசா ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களை அகற்ற கெடு
ADDED : மார் 06, 2025 10:43 PM
திருநின்றவூர்:திருநின்றவூரில் உள்ள ஈசா ஏரி, 0.15 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இதை, 0.50 டி.எம்.சி.,யாக அதிகப்படுத்த நீர்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்காக எடுக்கப்பட்ட ஆய்வில், ஏரியை ஆக்கிரமித்து மூன்று அம்மன் கோவில்கள், ஒரு பொது கழிப்பறை, மூன்று மளிகை கடை மற்றும் வீடுகள் என, மொத்தம் 250 கட்டடங்கள் கட்டியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஏரியைச் சுற்றியுள்ள கொட்டாம்பேடு ஏரிக்கரை தெரு, லட்சுமிபதி நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, திருநின்றவூர், கன்னிகாபுரம் ரயில் நிலைய சாலை மற்றும் பெரியார் நகரில் உள்ள 250 கட்டடங்களுக்கு, அதிகாரிகள் நேற்று 'நோட்டீஸ்' வழங்கினர்.
கடிதம் கிடைக்கப் பெற்ற 14 நாட்களுக்குள், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சொந்த இடம் என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.