நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமம் தணடலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 34. இவருக்கு சொந்தமான 'டாடா' டிப்பர் லாரியை, அவரது ஓட்டுனர் வெங்கடேசன் என்பவர், சுதாகரின் பாட்டி வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை டிப்பர் லாரி மாயமானது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுதாகருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுதாகர் அளித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.