/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெரு குழாய்களில் கசிவு குடிநீர் வீணாகும் அவலம்
/
தெரு குழாய்களில் கசிவு குடிநீர் வீணாகும் அவலம்
ADDED : மார் 02, 2025 11:45 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்து குழாய் வாயிலாக சிட்ரபாக்கம், செட்டித்தெரு, பேருந்து நிலைய பின்புறம் உள்ளிட்ட இடங்களில், ஐந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.
இதிலிருந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
வீடு, கடைகளுக்கு குடிநீர் இணைப்பு பெற பேரூராட்சியில் பணம் செலுத்த வேண்டும். இணைப்பு பெறாத ஏழைகளின் குடிநீர் தேவைக்காக, தெருக்களில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் பேரூராட்சி பின்புறம் உள்ளிட்ட சில இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், தண்ணீர் விரயமாவது குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெருக்களில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.