/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெய்யூரில் மகளிர் குழுவிற்கு ரூ.1.12 கோடி கடனுதவி
/
மெய்யூரில் மகளிர் குழுவிற்கு ரூ.1.12 கோடி கடனுதவி
ADDED : ஆக 20, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, மெய்யூர் ஊராட்சி, ராசபாளையம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லாவன்யா சரத்பாபு தலைமை வகிக்க, கூட்டுறவு சங்க செயலர் ஏழுமலை வரவேற்றார்.
கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், 9.32 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார். பின் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு 1 கோடியே, 12 லட்சத்து, 23 ஆயிரத்து, 600 ரூபாய் கடனுதவி வழங்கினார்.

