/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
/
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 26, 2024 08:13 PM
திருவள்ளூர்:தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தற்போது, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை கோயம்பேட்டில் இருந்து தொலைதுார பேருந்துகள் இயக்கப்பட்டதால், திருமழிசை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் திருமழிசை வந்து கோயம்பேடு சென்று தென்மாவட்டங்களுக்கு சென்று வந்தனர்.
தற்போது, கிளாம்பாக்கத்திற்கு செல்ல திருமழிசையில் இருந்து நேரடி பேருந்து வசதி இல்லை.
திருமழிசை மற்றும் சுற்றியுள்ளோர், பூந்தமல்லிக்கு சென்று பின் தாம்பரம், வண்டலுார் சென்று, கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, திருமழிசை மற்றும் சுற்றியுள்ள பகுதிவாசிகள் வசதிக்காக திருமழிசை பகுதியிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.