ADDED : செப் 04, 2024 08:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசிங், 48; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் உள்புறமாக போடப்பட்டிருந்த முன் கதவு தாழ்ப்பாளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். வீட்டு அலமாறியில் வைத்திருந்த 4 சவரன் நகை, 5,000 ரூபாய், நான்கு மொபைல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.