/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூரில் மொபைல் போன் கடையின் பூட்டு உடைப்பு
/
மணவூரில் மொபைல் போன் கடையின் பூட்டு உடைப்பு
ADDED : ஏப் 29, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, : திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் 37; மணவூர் ரயில் நிலைய சாலையில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவர், இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று முன்தினம் காலை கடையை திறந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால், கடையில் உள்ள பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை திருடு போகவில்லை. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

