/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டியில் இன்று ‛உங்களை தேடி' திட்டம்
/
கும்மிடிப்பூண்டியில் இன்று ‛உங்களை தேடி' திட்டம்
ADDED : பிப் 18, 2025 09:40 PM
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், இன்று ஒரு நாள், கலெக்டர் பிரதாப் தலைமையில், ‛உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
திட்டம் வாயிலாக மக்களை நாடி குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும். இந்த முகாமில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்ற இருக்கின்றனர்.
நாள் முழுதும் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பின், மாலையில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் , அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் நடத்தி, மக்கள் குறைகள் மீது தீர்வு காணப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.