ADDED : ஜூன் 17, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, ஜூன் 18–
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரியில், அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநரான, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், 32, என்பவரை கைது செய்தனர்.
