/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலி
ADDED : ஆக 28, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தம், 36. லாரி டிரைவர். நேற்று மதியம், லாரியில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பெரியபுலியூர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்றார்.
தொழிற்சாலை அருகே லாரியை நிறுத்தி, லோடு மீது கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்க லாரி மீது ஏறினார்.
அப்போது, உயர் அழுத்த மின்கம்பிகள் மீது அவருடைய தலை உரசியது.
மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.