/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர் திருட முயன்றவர் கைது
/
டூ - வீலர் திருட முயன்றவர் கைது
ADDED : ஜூலை 24, 2024 08:05 PM
திருவள்ளூர்:திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் பணியிலிருந்த போது, இவருடன் ரவி என்பரும் பணிபுரிந்து வந்தார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் மர்மநபர் ஒருவர் கையில் சாவிக் கொத்துக்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இருசக்கர வாகனமாக சாவியை போட்டு திறக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்த சுரேஷ், அந்த நபரை பிடித்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தை விஜய், 44, என்பதும், இருசக்கர வாகனங்களை திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து, திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் சுரேஷ் கொடுத்த புகாரின்படி, விஜயை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.