/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது
/
பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது
பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது
பூண்டு வியாபார கடையில் ரூ.6 லட்சம் திருடியவர் கைது
ADDED : மார் 05, 2025 11:55 PM
கோயம்பேடு, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன், 52; கோயம்பேடு சந்தையில் பூண்டு மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார்.
கடையில் விற்பனையான ஆறு லட்சம் ரூபாயை, கடந்த 2ம் தேதி இரவு, கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டி சென்றார். நேற்று முன்தினம் கடையை திறந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது.
கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நெற்குன்றத்தில் தங்கி, இவரது கடையில் பணிபுரிந்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பரசன், 43, என்பவர் திடீரென மாயமானது தெரிந்தது.
இந்நிலையில், அன்பரசனை நேற்று, போலீசார் பிடித்தனர். கடன் தொல்லை காரணமாக, கடையில் இருந்த பணத்தை, அன்பரசன் திருடியது தெரியவந்தது.
மேலும், திருட்டு பணத்தில் கடனை அடைத்து, மனைவி, பிள்ளைகளுக்கு புதிய துணிகளை வாங்கியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 4.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.