/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை தாக்கி மிரட்டியவருக்கு சிறை
/
வாலிபரை தாக்கி மிரட்டியவருக்கு சிறை
ADDED : பிப் 23, 2025 08:01 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 21. தனியார் பைனானாசில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 21ம் தேதி, நண்பர் ரமேஷ்குமார், 22, என்பவருடன், 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், சிற்றம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வேப்பஞ்செட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு குடிபோதையில் வந்த நான்கு பேர் வாகனத்தை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு ஆபாசமாக பேசி கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த இருவரும், கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம், சந்திரசேகர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்து வேப்பன்செட்டி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த, 24, தீனா, 23, சாரதி, 25, சாமிநாதன், 41 என தெரிய வந்தது.
இதில், சாமிநாதன் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்த கடம்பத்துர் போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரையும் தேடி வருவதாக கடம்பத்துார் போலீசார் தெரிவித்தனர்.

