/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாந்தீஸ்வரர் பூஜை: அலைமோதிய பக்தர்கள்
/
மாந்தீஸ்வரர் பூஜை: அலைமோதிய பக்தர்கள்
ADDED : ஏப் 07, 2024 12:51 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை, காலை 6- - 12 மணி வரை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பூஜை நடக்கிறது. கட்டணமாக 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால் திருமண தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூஜை செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் வடாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்ததால், இரண்டு மாதத்திற்கு பின், கடந்த வாரம் சனிக்கிழமை மீண்டும் பூஜை துவங்கியது.
நேற்று சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதற்கான டிக்கெட் பெற, ஒருமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

