/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பூஜை
/
திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பூஜை
ADDED : செப் 15, 2024 01:17 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 2010ம் ஆண்டு முதல் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடக்கிறது.
மாந்தி என்பவர் சனி பகவானின் மகன் என்பதால், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரிகார பூஜை நடக்கிறது.
இந்த பரிகார பூஜை செய்தால், அஷ்டம சனி, ஜென்ம சனி தொல்லைகள் நீங்கும், திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கடன் தொல்லை தீரும் உட்பட பல தோஷங்கள் நீங்கும் என்பதால், பக்தர்கள் நம்பிக்கையுடன் பங்கேற்று வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 600 பக்தர்கள் பங்கேற்கும் நிலையில் பரிகார பூஜைக்கு கட்டணமாக 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. பூ, பழம், நெய் மற்றும் பூமாலை, மிளகு சாதம், வடை, என, 20க்கும் மேற்பட்ட பொருட்களை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நேற்று நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.