/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் சாலையில் மீடியன் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
மீஞ்சூர் சாலையில் மீடியன் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மீஞ்சூர் சாலையில் மீடியன் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மீஞ்சூர் சாலையில் மீடியன் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 08, 2024 12:58 AM

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கொக்குமேடு கிராமத்தில் மழைநீர் செல்வதற்காக, சிமெனட் பாலம் அமைக்கப்படுகிறது.
சதுர வடிவில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்களை சாலையில் பள்ளம் தோண்டி பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி செல்லும் திசையில், போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்கள் மேற்கண்ட பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னதாக உள்ள பகுதியில் வலதுபுறம் திரும்பி, எதிர்திசையில் பயணித்து, மீண்டும் இடதுபுறம் சென்று பயணத்தை தொடர்கிறது.
இவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் அங்குள்ள மீடியன் பகுதியை சேதப்படுத்தி உள்ளன. இதனால் மீடியனின் சிமென்ட் பூச்சுக்கள் கொட்டி உள்ளிருக்கும் இரும்பு கம்பி, வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. இது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்து உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீடியன் பகுதியில் வலதுபுறம் திரும்பும்போது, நீட்டிக்கொண்டிருக்கும் இரும்பு கம்பிகளால் தடுமாற்றம் அடைகின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கும், கார், வேன் உள்ளிட்டவைகள் மீது இரும்பு கம்பிகள் உரசி, அவை சேதம் அடைவதற்கும்வாய்ப்புகள் உள்ளன.
மேற்கண்ட பகுதியில் சேதம் அடைந்துள்ள மீடியன் பகுதியை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.