/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களை தேடி மருத்துவம் கலெக்டர் பாராட்டு
/
மக்களை தேடி மருத்துவம் கலெக்டர் பாராட்டு
ADDED : ஆக 05, 2024 06:29 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்ட மருத்துவர் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 27,51,656. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 20,85,756 பேர். 20,65,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2,44,522 பேருக்கு ரத்த அழுத்தம், 1,41,861 பேருக்கு சர்க்கரை நோய், 1,28,581 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 14 வட்டாரங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், இயன் முறை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ், பிரபாகரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.