/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் மண் குவியல்
/
தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் மண் குவியல்
ADDED : செப் 12, 2024 11:45 PM

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் மற்றும் எளாவூர் பகுதிகளில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்குவது வழக்கம். மழைநீர் வடிந்ததும், அந்த இடத்தில் மண் குவியல் குவிந்து காணப்படும்.
அதை அகற்ற தவறியதால், தற்போது இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் பெரும் பகுதியில் மண் குவியல் பரவி கிடக்கிறது. இந்த மண் குவியலால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, சாலையோரம் செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், மண் குவியலை கண்டு திடீரென சாலையின் நடுவே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அப்போது, பின்னால் வேகமாக வரும் கனரக வாகனங்களில் இருசக்கரம் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் அதிகளவில் சிக்கி வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மண் குவியலை உடனுக்குடன் அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.