/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
46 வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம்
/
46 வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம்
ADDED : மார் 07, 2025 10:11 PM
திருவள்ளூர்:மினி பேருந்துகள் சேவையை, அனுமதி பெற்ற வழித்தடங்களில் இயக்க கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மினி பேருந்துகள் இயக்கப்படுவதற்காக 'பெர்மிட்' கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. மினி பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத 46 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், மினி பேருந்து இயக்குவதற்கான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது வெங்கட்ராமன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.