/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகளால் தொல்லை
/
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகளால் தொல்லை
ADDED : மார் 05, 2025 02:32 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால், அலுவலர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு வகையில் தொல்லைகள் ஏற்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மூன்று தளங்களை கொண்டுள்ளது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும், ஏராளமான மரங்கள் உள்ளன. இதனால், இங்கு 50க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள், கலெக்டர் வளாக அலுவலங்களுக்குள் புகுந்து, அங்குள்ள கோப்புகளை நாசப்படுத்துகின்றன. ஊழியர்கள் கொண்டு வரும் உடைமைகளை சேதப்படுத்தி, உணவு பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன.
இதன் காரணமாக, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், மக்களும் குரங்குகளால் பல்வேறு வகையில் தொல்லைகளை அனுபவதித்து வருகின்றனர்.
எனவே, குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, காட்டு பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.