/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கொசு மருந்து தெளிப்பு
/
திருத்தணியில் கொசு மருந்து தெளிப்பு
ADDED : ஏப் 10, 2024 12:28 AM

திருத்தணி, திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 225 தெருக்களில், 14,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்தும், கால்வாய்கள் சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
இதனால் பகல் நேரத்திலேயே கொசுக்கடியால் மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் இரண்டு வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க திட்டமிட்டு, அதற்கான பணி துவங்கியது. வாகனம் மூலம் தெருக்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதால் கொசுக்கள் கட்டுப்படுத்தலாம் என நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.

