/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பில்லாஞ்சியில் பாசிபடர்ந்த குளம்
/
பில்லாஞ்சியில் பாசிபடர்ந்த குளம்
ADDED : ஆக 26, 2024 11:05 PM

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி. இந்த பகுதியில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தின் தெற்கில், சித்துார் நெடுஞ்சாலையை ஒட்டி, குடியிருப்புகளுக்கு நடுவே, பொதுகுளம் உள்ளது.
இந்த குளத்தின் நீரால், சுற்றுப்பகுதிக்கு மேல்நிலை தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த நுாற்றாண்டுடன், இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி கைவிடப்பட்டது. சமீபத்தில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
இந்த குளத்திற்கு நீர்வரத்து சிறப்பாக அமைந்துள்ளதால், ஆண்டு முழுவதும் நிரம்பியே காணப்படும். ஆனால், முறையாக பராமரிக்கப்படாததால், குளத்து நீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு சீரழிந்துள்ளது. குளக்கரையை சீரமைத்து, கழிவுகள் சேராதபடி பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.