ADDED : ஏப் 30, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் சித்ரா, 46. இவரது மகள் அனுசுயா, 22. இருவரும், நேற்று முன்தினம் குளிர்பானத்தில் தலைமுடிக்கு அடிக்கும் மையை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இருவரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.