/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் உலா வரும் மாடுகளால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
ஆவடியில் உலா வரும் மாடுகளால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆவடியில் உலா வரும் மாடுகளால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ஆவடியில் உலா வரும் மாடுகளால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 15, 2024 01:59 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சியில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இதையடுத்து, சாலையில் கால்நடைகள் திரிய விடும் உரிமையாளர்களிடம் மாடுகளுக்கு 10,000 கன்றுக்குட்டிக்கு 5,000 ரூபாய் என, அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள், திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் அடைக்கப்படுகின்றன.
நடவடிக்கை தொடர்ந்தும், சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி போலீஸ் கமிஷனரகம் அருகே, தினமும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உலா வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே மாடுகளால் தொடரும் விபத்து, உயிர்பலி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.