/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூடிய கேட்டை கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தை தடுக்க எதிர்பார்ப்பு

ADDED : மே 23, 2024 11:48 PM

திருவாலங்காடு, சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கத்தில் புறநகர், எக்ஸ்பிரஸ், சரக்கு வாகனங்கள் என, ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் தக்கோலம், பேரம்பாக்கம், திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சிபுரம் செல்வோர் இந்த ரயில் தண்டவாளத்தைக் கடந்து சாலை வழியாக செல்வர்.
இதனால், வாகன ஓட்டிகள் முக்கியத்துவம் கருதி ரயில்வே கேட் 10 -- 15 நிமிடங்களுக்கு ஒருமுறை திறக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, இருசக்கர வாகன ஓட்டிகள் மூடிய ரயில்வே கேட்டை ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.
இரவு நேரங்களில் போதையில் வருவோர் பூட்டிய கேட்டுக்குள் இருசக்கர வாகனத்துடன் நுழைந்து ரயில்கள் வரும்போது எந்த திசைக்கு செல்வது என தெரியாமல் அல்லல்படுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உயிர்பலி ஏற்படுவதற்கு முன், ரயில்வே போலீசார் ரயில்வே கேட் அருகே கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.