/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஆக 25, 2024 11:04 PM

திருவாலங்காடு: சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது புதுார் கிராமம்.
இச்சாலை வழியாக திருப்பதி, திருத்தணி, திருவள்ளூர், வேலுார், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
புதுாரை சுற்றியுள்ள எல்லப்பநாயுடுபேட்டை, குன்னவளம், குப்பத்துப்பாளையம், காந்தி கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்வோர், புதுார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.
இரவு 11:00 மணி வரை குறைந்தது 30 பயணியராவது இங்கு இறங்கி இக்கிராமங்களுக்கு செல்வர். எனவே, புதுார் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களாக இரவில் மின்விளக்கு எரியாததால் அப்பகுதி கும்மிருட்டாக காணப்படுகிறது. இதனால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடக்க நிற்கும் இருசக்கர வாகனங்கள் தெரியாமல் விபத்து சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, இப்பகுதியில் எரியாமல் உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.