/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கோலம் போட்டு நகராட்சி விழிப்புணர்வு
/
சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கோலம் போட்டு நகராட்சி விழிப்புணர்வு
சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கோலம் போட்டு நகராட்சி விழிப்புணர்வு
சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கோலம் போட்டு நகராட்சி விழிப்புணர்வு
ADDED : மே 21, 2024 06:32 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 60 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை, தனியார் வாயிலாக வீடு தோறும் சென்று அவற்றை பெற்று, குப்பை கிடங்கில் துப்புரவு ஊழியர்கள் சேர்க்கின்றனர்.
தினமும், 30,000 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வீடு தோறும் வாகனங்களில் துப்புரவு ஊழியர்கள் குப்பையை பெற்று வரும் நிலையில், சிலர் இன்னமும் அவர்களிடம் குப்பை வழங்காமல், சாலையோரம், சாலை சந்திப்பு இடங்களில் கொட்டி நகரை அசுத்தமாக்கி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் சாலையோரம் குப்பை கொட்டக் கூடாது; வீடு தேடி வரும் துப்புரவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என, பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், நகரவாசிகள், இதனை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து சாலையோரம் குப்பையினை குவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி சாலையில், ராஜம்மாள் பூங்கா நுழைவு வாயிலில், தினமும் குப்பை குவியல் கொட்டப்பட்டு வருகிறது.
அங்கு குப்பை கொட்டக்கூடாது என, நகராட்சி துப்புரவு அலுவலர்கள் அறிவுறுத்தியும், அப்பகுதிவாசிகள் திருந்துவதாக இல்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ராஜம்மாள் பூங்கா நுழைவு வாயிலில், அழகிய வண்ண கோலமிட்டு, குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

