/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
/
கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
கொசு உற்பத்தியை தடுக்காவிட்டால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
ADDED : பிப் 25, 2025 07:51 PM
திருவள்ளூர்:'வீடுகளில் கொசு புழுக்களை உற்பத்தி ஆகாமல் நகரவாசிகள் கண்காணிக்க வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில் 16,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சி முழுதும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடு தோறும் சுகாதார ஊழியர்கள் சென்று, 'அபேட்' கொசு மருந்து தெளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இதை நகரவாசிகள் உணர்ந்து, தங்களது வீடுகளில் கொசு உற்பத்தி ஆகாமல் கண்காணிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரின் குடியிருப்பினை, தொற்று நோய் பரப்பும் இடமாக கருதப்பட்டு, பொது சுகாதார சட்ட விதிகளின்படி அபராதமும். சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
எனவே, டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான நகராட்சி நடவடிக்கைக்கு நகரவாசிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.