/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளம் பெண் கொலை? போலீசார் விசாரணை
/
இளம் பெண் கொலை? போலீசார் விசாரணை
ADDED : மே 10, 2024 01:06 AM
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில், பாதிரிவேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பின்புறம், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடப்பதாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று பார்த்தபோது, தலையில் ரத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அப்பகுதியில், ஆண்கள் அணியும் நீல நிற சட்டை ஒன்று இருந்தது. அதன் அருகே, காலி மது பாட்டில் ஒன்றும், அரசு பேருந்தின் 20 ரூபாய் டிக்கட்டும் இருந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண், மாதர்பாக்கம் பகுதியில் குப்பை சேகரிப்பவர் என கூறப்படுகிறது. அவர் யார், அவரை கொலை செய்தவர் யார், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் மற்றும் எதிரே உள்ள டாஸ்மாக் கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.