/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திர மாநில நீர்பிடிப்பால் நிரம்பும் நாகபூண்டி ஏரி
/
ஆந்திர மாநில நீர்பிடிப்பால் நிரம்பும் நாகபூண்டி ஏரி
ஆந்திர மாநில நீர்பிடிப்பால் நிரம்பும் நாகபூண்டி ஏரி
ஆந்திர மாநில நீர்பிடிப்பால் நிரம்பும் நாகபூண்டி ஏரி
ADDED : ஆக 23, 2024 02:33 AM
ஆர்.கே,பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு, நாகபூண்டியை ஒட்டி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது.
சித்துார் மாவட்டத்தில் கங்கம்மாபுரம், அய்யன் கண்டிகை, திருநாதராஜபுரம் உள்ளிட்ட ஆந்திர மாநில கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள், மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த மலைகளை ஒட்டி, புல்லுார் காப்புக்காடு உள்ளது. அய்யன்கண்டிகை, புல்லுார் காப்புக்காடு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதி, சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகின்றன.
இந்த பகுதியில் பெய்யும் மழைநீர், அதையொட்டிய தமிழக கிராமங்களான நாகபூண்டி, விடியங்காடு உள்ளிட்ட பகுதிக்குள் நுழைகின்றன.
நாகபூண்டி ஏரிக்கு வரும் மழைநீர், ஏரியை நிரப்பிவிட்டு, வி.பி.ஆர்.புரம் வழியாக வெளியேறுகிறது. வீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளை நிரப்பி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நீராதாரமாக அமைகிறது.
சித்துார் மாவட்ட மழைநீரை நேரடியாக பெறும் நாகபூண்டி ஏரி தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஏரிகளுக்கு விரைவில் நீர்வரத்து துவங்கும் நிலை உள்ளது.

