/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நல்லுார் கிராம மக்கள் போராட்டம்
/
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நல்லுார் கிராம மக்கள் போராட்டம்
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நல்லுார் கிராம மக்கள் போராட்டம்
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நல்லுார் கிராம மக்கள் போராட்டம்
ADDED : மார் 13, 2025 10:49 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த நல்லுார் ஊராட்சியில், அரசு நிலத்தில், கடந்த, 50ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குடியிருப்புவாசிகள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து வருவாய்த்துறையினரிடம் முறையிட்டு வந்தனர்.
இது குறித்து நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று, வீட்டுமனை பட்டா கேட்டு, சட்டசபையை நோக்கி நடைபயணம் செல்வதாக அறிவித்தனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலர் அமிர்தலிங்கம் தலைமையில் கிராமவாசிகள் நல்லுாரில் கூடினர்.
கோரிக்கை மனு தயார் செய்து நடை பயணத்தை துவங்கும்போது, சோழவரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
வருவாய்த்துறையினரும் அங்குசென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
பத்துஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், 50 ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை தொடர்ந்து, கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.