/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுனரிடம் பணம் பறித்த கும்பலுக்கு வலை
/
ஓட்டுனரிடம் பணம் பறித்த கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 20, 2024 09:47 PM
திருவொற்றியூர்:எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, 70வது பிளாக்கைச் சேர்ந்தவர் லோகேஷ்குமார், 40; ஷேர் ஆட்டோ ஓட்டுனர். நேற்று மதியம், எண்ணுார் விரைவு சாலையில், ஆட்டோ ஓட்டினார்.
அப்போது, திருவொற்றியூர், கே.வி.கே., குப்பம் அருகே, 30 வயது மதிக்கத்தக்க மூன்று வடமாநில வாலிபர்கள், அவரது ஆட்டோவில் ஏறி சவாரி செய்துள்ளனர்.
மஸ்தான் கோவில் சந்திப்பில் இறங்கிய போது, ஆட்டோ ஓட்டுனர், நபர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம், 30 ரூபாய் கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்த வடமாநில கும்பல், லோகேஷ்குமாரை முதுகில் தாக்கி, ஆட்டோவிற்கு தவணை கட்ட வைத்திருந்த, 10,500 ரூபாய் பணத்தையும் அவரிடம் இருந்து பறித்து தப்பியோடினர். ஆட்டோ ஓட்டுனர் புகாரின்படி, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

