/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை
/
9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை
ADDED : ஆக 06, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, மல்லியங்குப்பம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன், 34. தன் வீட்டில் கூண்டு அமைத்து, 20க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோழிகளை அடைத்து விட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது, 9 கோழிகளை காணவில்லை.
சுற்றியுள்ள இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்படிபோலீசார் வழக்குப் பதிந்து, கோழிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.