/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்
/
திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்
ADDED : ஆக 29, 2024 11:19 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், அருகே உள்ள மகளிர் சுயஉதவி குழு கட்டடத்தில் போதிய அடிப்படை வசதியின்றி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி அதே இடத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, 2022- -23 ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக நவீன வசதிகளுடன் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.
மூன்று மாதங்களாக அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பதற்கு தயாராக உள்ள நிலையிலும் திறப்பு விழா காணாததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெரியகடம்பூர் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் சமையல் கூடம் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.