/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அம்மன் கோவில்களில் அமாவாசை பூஜை
/
திருத்தணி அம்மன் கோவில்களில் அமாவாசை பூஜை
ADDED : பிப் 27, 2025 09:47 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், அமாவாசையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதே போல, திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பெண்கள், மூலவர் அம்மனை, 108 முறை வலம் வந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன், வன துர்க்கையம்மன், காந்தி ரோடு துர்க்கையம்மன், திரவுபதியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் அமாவாசையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.